Sunday, May 27, 2018

23. Preah Bhak Ganes or Bhiganes - Cambodia




Hindu God Ganesha, a Khmer version. In Cambodia the  Khmer people customary call Preah Bhak Ganes or Bhiganes, meaning the obstacles remover. This statue was found in the Phreah Khan Temple of Seam Reap province. This temple was build by King Jayavarman VII to honour his father.   It's a 11th Century Angkorian period  'Baphuon" Style sculpture made of sandstone. Its now included in the  'Stories from Stone' exhibition gallery collection at Angkor National Musuem, Seam reap, Cambodia.

கம்போடியாவின் சியாம் ரீப்  அங்கோர் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு விநாயகர் சிற்பம்  இது.  இச்சிற்பம் கண்டெடுக்கப்பட்ட ப்ரியா கான் கோயில் கி.பி. 11ம் நூற்றாண்டில் மன்னன் 7ம் ஜெயவர்மனால் கட்டப்பட்டது. தனது தந்தைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்தக் கோயிலை 7ம் ஜெயவர்மன் கட்டினான்.   கம்போடிய மக்கள் ப்ரியா பாக் கானேஸ் அல்லது பிகானஸ் என்று இதனை அழைக்கின்றனர். பிகானஸ் என்பது க்மேர் மொழியில் தடைகளை நீக்குபவர் என்று பொருள்படும்.   விநாயகர் வழிபாடு கம்போடியாவில் கி.பி.11ம் நூற்றாண்டில் வழக்கில் இருந்தமையை இது காட்டுகிறது.

-சுபா

Friday, December 9, 2016

22. Buddha - Thailand





This is a peculiar form of Buddha which I noticed in several spiritual centers in Thailand. This particular statue can be found at Wat Benjamaphopit, a temple built in 1900 by the King Rama V in 1900.  This statue of Buddha, seated cross-legged in the attitude subduing himself by fasting. This style which resembles Greek style of Gandhara sculptures was originally kept in the Museum of Lahore Pakistan. 

இங்கே காணப்படும் புத்தரின் வடிவம் தாய்லாந்தில் ஒரு சில இடங்களில் காணக்கிடைக்கின்றது. இந்தக் குறிப்பிட்ட சிலை, உடலில் உள்ள சதைகள் வற்றி எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் புத்தரைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தச் சிலை தாய்லாந்து நகரின் மையப்பகுதில் உள்ள வாட் பெஞ்சாமாபோபிட் பௌத்த விகாரையில் வெளிச்சுற்று மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாக்கிஸ்தானின் லாஹோர் அருங்காட்சியகத்தில் முன்னர் இருந்ததாக அறியப்படும் இந்தச் சிற்பம் பண்டைய கிரேக்க தாக்கம் கொண்ட காந்தாரா பகுதியில் உருவாக்கப்பட்டது. 

சுபா

Wednesday, August 24, 2016

21. Nepal Murugan - Kathmandu, Nepal



Lord Muruga's statue, originally  made in Kathmandu Valley  in Nepal. This statue is dated 8th or 9th Cent AD, and can be found at the Chicago Museum of Arts, North America. Its a gift to the museum, donated by Marilynn B.Alsdorf in 2014.

முருகன் வடிவத்தில் இப்படி ஒரு வடிவமா என ஆச்சரியப்பட வைத்தது இந்தச் சிலை. இது நேப்பாளின் காட்மண்டு பகுதியில் உருவாக்கப்பட்ட சிலை. கி.பி 8 அல்லது 9 என காலம் கணிக்கப்படும் இச்சிலை தற்சமயம் சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. முருகன் அமர்ந்திருக்கும் மயில் வாகனம் தான், இது முருகன் சிலை என பார்ப்போர் அறிந்து கொள்ளும் வகையில் உதவுகின்றது.  முக வடிவம் நேப்பாள மக்களின் முகச்சாயலை ஒத்திருக்கின்றது. இதனை மேரிலின் ஆல்ஸ்டோர்ஃப் என்பவர் இந்த அருங்காட்சியகத்திற்கு 2014ம் ஆண்டில் பரிசாக அளித்திருக்கின்றார்.

​சுபா​

Thursday, August 4, 2016

20. Bodhisatva of Gandhara, North west Pakistan



A statue of Bodhisatva of Gandhara, from present day North west Pakistan. 
Its dated 1- 4 AD and now placed in the Victoria & Albert Art and Design Museum, in London,  in the South Asia collection. A Bodhisattva is a teacher or a future Buddha, who is on the path to enlightenment. Bodhisatva statues can be seen with rich ornaments, wearing princely dress and jewelleries. This figure was found in Gandhara, where Buddhist sculptures are influenced by Greek and Roman art through sequences of invasion, human migration and trade activities. 

இந்த அழகிய சிலை இன்றைய காந்தாரா என அழைக்கப்பட்ட வட மேற்கு பாகிஸ்தான் பகுதியிலிருந்து பெறப்பட்டது. கி.பி.1-4 என அறியப்படும் இது போதிசத்துவரின் சிற்பமாகும். போதிசத்வர் என்பவர் ஞானப்பாதையில் செல்பவர் என்றும் புத்தர் தன்மையை அடையக்கூடிய நிலையை அடைபவர் என்றும் அறியப்படுபவர்.  இப்பகுதியில் இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை என அறியப்படும், கண்டெடுக்கப்பப்ட்ட சிற்பங்கள் ரோமானிய மற்றும் கிரேக்க சாயலுடன் அமைந்திருப்பதக் காணலாம். குறிப்பிடத்தக்க கிரேக்க ரோமானிய படைகள் மற்றும் வணிகர்களின் இப்பகுதிக்கான வருகை இப்பகுதியில் கலைப்பொருட்கள் உருவாக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவே இவை.  போதிசத்வர் ஒரு இளவரசர் போன்ற உடையலங்காரத்துடனும் நகைகளுடனும் தோன்றுவதைக் காணலாம்.  இந்த அருங்கலைப்படைப்பு இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் தென் ஆசியப்பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுபா

Sunday, July 17, 2016

19. Mari Attal - Coppenhagen, Denmark


Mariamman, a village deity, well known in Tamil Nadu villages. She  is the goddess protecting people from Cholera and smallpox. This Beautifully carved statue is placed in the Asian collection area in the National Museum of Denmark in Copenhagen.  Its labeled as Goddess "Mari Attal" of Ca.1890.

இங்கே காணப்படும் சிலை டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹாகனில் உள்ள National Museum of Denmark அருங்காட்சியகத்தில் ஆசிய அருங்கலைப்பொருட்கள் சேகரிப்பு உள்ள பகுதியில் இருப்பது. இதற்கு மாரியாத்தாள் எனப்பெயரிடப்பட்டு ஏறக்குறைய 1890ம் ஆண்டில்  உருவாக்கப்பட்ட சிற்பம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மாரியாத்தாள் காலரா நோயிலிருந்தும் சின்னம்மை நோயிலிருந்தும் மக்களைக் காப்பவள் என்ற குறிப்பும் இங்கே உள்ளது.

அன்புடன்
சுபா

அ. ராமசாமி மாரியம்மன் பற்றிய சிறுகுறிப்பு ஓரளவு சரி . ஆனால் இந்த உருவம் மாரியம்மனின் குறியீடுகளைக் கொண்டிருக்கவில்லை. காளியம்மன் பற்றிய குறியீடுகளோடு பொருந்தி நிற்கிறது. தவறாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பெரும்பாலும் கோடைகாலத்தில் மழைவேண்டி வணங்கப்படும் ஊர்த்தெய்வம் மாரியம்மன் . கோடைகால நோய்களான அம்மை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைத் தடுப்பதற்கு மழை- மாரி வேண்டும். அதைத் தரும் வல்லமை கொண்டவள் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஊரிலும் மாரியம்மன் திருவிழாக்கள் நடக்கின்றன. அப்படி நடக்கும் திருவிழாக்களில் மாரியம்மனுக்கு இதுதான் உருவம் என்று வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலான கிராமப்புற மாரியம்மன் கோயில்களில் மாரியம்மனைச் சிலைவடிவில் கூட வணங்குவதில்லை. மழை அல்லது குளிர்ச்சியின் குறியீடுகளையே ஊர்வலமாக எடுத்துவ்ருவார்கள். எங்கள் ஊரில் தென்னம்பாளையைக் கொண்டு உருவாக்கப்படும் மாரியம்மனின் ஆயுட்காலம் ஒரு இரவுதான். உருவாக்கப்படும் மாரியம்மனை ஊரில் வைத்துத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் முதல் உருவாக்கி, ஒருநாள் இரவில் கொண்டாடிவிட்டு அடுத்தநாள் நீர்நிலைகளில் கலக்கிவிடுவார்கள். ஊர்த்தெய்வமான மாரியம்மனைச் சமயபுரம், திண்டுக்கல் போன்ற சிறுநகரங்களில் பெருங்கோயில் கடவுளாக ஆக்கிச் சிலைகளை வடித்திருக்கிறார்கள். அங்கே ஆகமவிதிகள் நுழைந்திருக்கின்றன. ஆனால் இப்போது கோயில்பூசாரிகளின் நலனை முன்வைத்து எல்லா அம்மன் கோயில்களையும் ஆகமவிதிகள் கொண்டு வழிபடும் முறைக்கு மாற்றிவிடும் வேலைகளும் நடக்கின்றன. இது நம்பிக்கைகளை விலக்கிவிட்டு அமைப்பை நம்பச்செய்யும் வேலை.

Monday, May 16, 2016

18. Ganesha on pedastal surrounded by skulls - Java, Indonesia




This is a well known Hindu God Ganesha's sculpture from Java Indonesia. Its unique in the sense that unlike the usual Ganesha sculptures that hold Mothakam in one hand, this sculpture shows Ganesha holding skull on both hands and stands on pedestal surrounded by skulls. The representation of skulls together with Ganesha may be inspired by Tantric philosophical tradition. Its a 13th century sculpture. At present it is placed in the Museum Volkenkunde in Leiden Netherlands.

13ம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிற்பம் இது. இந்தோனீசியாவின் ஜாவா தீவிலிருந்து கொண்டுவரப்பட்டு நெதர்லாந்தின் மானுடவியல் அருங்காட்சியகத்தில்  ஆசிய சேகரிப்புக்கள் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. மிக வித்தியாசமாக இந்த விநாயகர் சிற்பத்தில் வழக்கமாக விநாயகர் உருவச் சிலையில் இருக்கும் மோதகத்திற்கு பதிலாக இரண்டு கைகளிலுமே மனித மண்டை ஓடுகள் இருக்கின்றன. விநாயகர் உருவம் மனித மண்டை ஓடுகளால் சூழப்பட்ட பீடத்தில் அமர்ந்திருப்பது போல இச்சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இது தாந்திரிக தத்துவத்தின் தாக்கம் இந்தோனீசியாவில் எழுந்த சமயம் அத்தத்துவம் உள்வாங்கப்பட்டு  ஏற்கனவே இருந்த இந்து சமய தெய்வ வடிவம் புதிய பரிணாமம் பெற்று மாற்றம் காண்பதாக அமைந்திருக்கின்றது.

சுபா

Tuesday, November 10, 2015

17. Rosetta Stone - Egypt




Rosetta Stone, the only surviving fragment of a larger stone from a temple in Egypt. It carries an inscription in different languages which helped archaeologist to decipher the ancient Egyptian hieroglyphic script.  At the top portion of this stone the decree is written in hieroglyphs, the traditional script of Egyptian monuments. In the middle part, the same decree is written in Demotic script. This is the script used in everyday life of Egyptians in writing literature.  At the bottom of this stone the same decree is written in Greek, which was an official script used by the government at the time when this inscription was carved. At this time Egypt was ruled by a Greek dynasty and the decree was issued in honour of the  boy king PtolemyV Ephiphanes. It records  the decision of the Egyptian priest to establish a royal cult  in return for Ptolemy's concessions to the Egyptian temples. This decree records the date on 27 March 196 BC.  This stone was placed in a temple probably at the city of Sais near Raschid (Rosetta). Its a collection of British Museum.


ரொசேட்டா கல்வெட்டு. இது தொல்லியல் ஆய்வுலகில் மிக முக்கிய ஆய்வுப் பொருளாக அறியப்படுவது. பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இக்கல் வைக்கப்பட்டுள்ளது. 27 மார்ச் மாதம் கி.பி196. அரசன் தாலமி சில ஆலயங்களுக்கு வழங்கிய சலுகைகளை விளக்கிக் கூறும் அரச கட்டளையைக் காட்டும் ஒரு கல்வெட்டு இது. இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் இக்கல்வெட்டில் மூன்று வெவ்வேறு எழுத்துருக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்பதாகும்.

மேல் பகுதியில் முதலில் வருவது எகிப்திய ஹீரோக்லிப்ஸ் எழுத்துரு. அதனை அடுத்தார்போல் வருவது டிமோட்டிக் எனப்படும் எகிப்திய இலக்கியங்களை எழுதப்பயன்படுத்தப்பட்ட எழுத்துறு. அடுத்ததாக வருவது கிரீக் மொழி எழுத்துரு. இக்கல் எழுதப்பட்ட காலத்தில் எகிப்து கிரேக்கத்தின் ஆட்சி கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஆகவே கிரேக்க மொழி அரச மொழியாக அக்காலகட்டத்தில் எகிப்தில் அமைந்திருந்தது. எகிப்தின் ராஷீட் எனப்படும் பகுதியில் உள்ள ஆலயத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டதால் அது இப்பெயருடன் அழைக்கப்படுகின்றது.

இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே ஹீரோக்லிப்ஸ் எழுத்துக்களை வாசித்தறியும் முறையை தொல்லியல் ஆய்வுத்துறையினர் அறிந்து கொள்ள முடிந்தது என்பதே இக்கல்வெட்டின் மாபெரும் தனிச்சிறப்பு.

சுபா