Sunday, November 23, 2014

10. Kubera - Java, Indonesia



This is a British Museum collection. A 9th century AD Kubera statue found in Java, Indonesia. Kubera is the lord of wealth as known in Hindu mythology.  He is also known as guardian of the North. The ornaments  are light and elegant and Kubera is carved in sitting posture.  This beautiful bronze statue was originally collected by Rev.Flint, the Executor of Lady Raffles. 

இது பிரித்தானிய அருங்காட்சியகத்தின் ஆசிய கலைப்பொருட்கள் சேகரிப்பு அமைந்துள பகுதியில் இருக்கும் சிற்பம். வெங்கலத்தினால் ஆன குபேரனின் கிபி 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை. இந்து மத நம்பிக்கையில் குபேரன் செல்வங்களுக்கு அதிபதியாகக் குறிக்கப்படுவர். அவர் தென் திசைக்கும் அதிபதி. இந்தச் சிற்பம் இந்தோனீசியாவின் ஜாவா தீவிலிருந்து கொண்டுவரப்பட்டது. இது ரெவரண்ட் ஃப்லிண்ட் அவர்களின் சேகரிப்பிலிருந்து பின்னர் பிரித்தானிய அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்ட கலைப்பொருள். இக்குபேரன் சிற்பத்தின் மேல் இருக்கும் ஆபரணங்கள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டிருப்பதை இச்சிலையில் காணலாம்.

Monday, November 10, 2014

9. Buddha of Ghandhara




This four sided block piece, a limestone relief, depicts four significant scenes in the life of Buddha. One side showing his birth, the next showing enlightenment, the third showing the first sermon (above in this picture) seated above the wheel of Law, The Dharma Chakra, and the fourth side showing the visit of Brahma and Indra. This wonderful artwork was found in Ghandara, belongs to the 2nd-3rd Century AD. This British Museum collection is placed in the Department of Asia. 

நான்கு பகுதிகளைக் கொண்ட அமைப்பில் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த நான்கு வரலாற்று விஷயங்களை விளக்கும்  வகையில் இந்தச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் புத்தரின் பிறப்பு, இரண்டாம் பகுதி ஞானம் பெறுதலைக் காட்டும் காட்சி, மூன்றாம் பகுதியில் முதல் உபதேசம் வழங்குவதையும் அது போது தர்மசக்காத்தில் அமர்ந்தவாறு தமது போதனைகளை வழங்குவதாகாவும் உள்ள அமைப்பு உள்ளது இதனையே இங்கு காண்கின்றோம். நான்காவது பகுதி பிரம்மனும் இந்திரனும் புத்தரைக் காண வருவது போன்ற அமைப்பு.

இது காந்தாரையில் கண்டெடுக்கப்பட்ட அருங்கலைச் சிற்பம். இதன் காலம் கி.பி. 2 லிருந்து 3 எனக் கணக்கிடப்படுகின்றது.