Wednesday, August 24, 2016

21. Nepal Murugan - Kathmandu, Nepal



Lord Muruga's statue, originally  made in Kathmandu Valley  in Nepal. This statue is dated 8th or 9th Cent AD, and can be found at the Chicago Museum of Arts, North America. Its a gift to the museum, donated by Marilynn B.Alsdorf in 2014.

முருகன் வடிவத்தில் இப்படி ஒரு வடிவமா என ஆச்சரியப்பட வைத்தது இந்தச் சிலை. இது நேப்பாளின் காட்மண்டு பகுதியில் உருவாக்கப்பட்ட சிலை. கி.பி 8 அல்லது 9 என காலம் கணிக்கப்படும் இச்சிலை தற்சமயம் சிக்காகோ கலை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. முருகன் அமர்ந்திருக்கும் மயில் வாகனம் தான், இது முருகன் சிலை என பார்ப்போர் அறிந்து கொள்ளும் வகையில் உதவுகின்றது.  முக வடிவம் நேப்பாள மக்களின் முகச்சாயலை ஒத்திருக்கின்றது. இதனை மேரிலின் ஆல்ஸ்டோர்ஃப் என்பவர் இந்த அருங்காட்சியகத்திற்கு 2014ம் ஆண்டில் பரிசாக அளித்திருக்கின்றார்.

​சுபா​

Thursday, August 4, 2016

20. Bodhisatva of Gandhara, North west Pakistan



A statue of Bodhisatva of Gandhara, from present day North west Pakistan. 
Its dated 1- 4 AD and now placed in the Victoria & Albert Art and Design Museum, in London,  in the South Asia collection. A Bodhisattva is a teacher or a future Buddha, who is on the path to enlightenment. Bodhisatva statues can be seen with rich ornaments, wearing princely dress and jewelleries. This figure was found in Gandhara, where Buddhist sculptures are influenced by Greek and Roman art through sequences of invasion, human migration and trade activities. 

இந்த அழகிய சிலை இன்றைய காந்தாரா என அழைக்கப்பட்ட வட மேற்கு பாகிஸ்தான் பகுதியிலிருந்து பெறப்பட்டது. கி.பி.1-4 என அறியப்படும் இது போதிசத்துவரின் சிற்பமாகும். போதிசத்வர் என்பவர் ஞானப்பாதையில் செல்பவர் என்றும் புத்தர் தன்மையை அடையக்கூடிய நிலையை அடைபவர் என்றும் அறியப்படுபவர்.  இப்பகுதியில் இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை என அறியப்படும், கண்டெடுக்கப்பப்ட்ட சிற்பங்கள் ரோமானிய மற்றும் கிரேக்க சாயலுடன் அமைந்திருப்பதக் காணலாம். குறிப்பிடத்தக்க கிரேக்க ரோமானிய படைகள் மற்றும் வணிகர்களின் இப்பகுதிக்கான வருகை இப்பகுதியில் கலைப்பொருட்கள் உருவாக்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவே இவை.  போதிசத்வர் ஒரு இளவரசர் போன்ற உடையலங்காரத்துடனும் நகைகளுடனும் தோன்றுவதைக் காணலாம்.  இந்த அருங்கலைப்படைப்பு இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் தென் ஆசியப்பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுபா