Sunday, July 17, 2016

19. Mari Attal - Coppenhagen, Denmark


Mariamman, a village deity, well known in Tamil Nadu villages. She  is the goddess protecting people from Cholera and smallpox. This Beautifully carved statue is placed in the Asian collection area in the National Museum of Denmark in Copenhagen.  Its labeled as Goddess "Mari Attal" of Ca.1890.

இங்கே காணப்படும் சிலை டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹாகனில் உள்ள National Museum of Denmark அருங்காட்சியகத்தில் ஆசிய அருங்கலைப்பொருட்கள் சேகரிப்பு உள்ள பகுதியில் இருப்பது. இதற்கு மாரியாத்தாள் எனப்பெயரிடப்பட்டு ஏறக்குறைய 1890ம் ஆண்டில்  உருவாக்கப்பட்ட சிற்பம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மாரியாத்தாள் காலரா நோயிலிருந்தும் சின்னம்மை நோயிலிருந்தும் மக்களைக் காப்பவள் என்ற குறிப்பும் இங்கே உள்ளது.

அன்புடன்
சுபா

அ. ராமசாமி மாரியம்மன் பற்றிய சிறுகுறிப்பு ஓரளவு சரி . ஆனால் இந்த உருவம் மாரியம்மனின் குறியீடுகளைக் கொண்டிருக்கவில்லை. காளியம்மன் பற்றிய குறியீடுகளோடு பொருந்தி நிற்கிறது. தவறாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பெரும்பாலும் கோடைகாலத்தில் மழைவேண்டி வணங்கப்படும் ஊர்த்தெய்வம் மாரியம்மன் . கோடைகால நோய்களான அம்மை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களைத் தடுப்பதற்கு மழை- மாரி வேண்டும். அதைத் தரும் வல்லமை கொண்டவள் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஊரிலும் மாரியம்மன் திருவிழாக்கள் நடக்கின்றன. அப்படி நடக்கும் திருவிழாக்களில் மாரியம்மனுக்கு இதுதான் உருவம் என்று வைத்துக்கொள்வதில்லை. பெரும்பாலான கிராமப்புற மாரியம்மன் கோயில்களில் மாரியம்மனைச் சிலைவடிவில் கூட வணங்குவதில்லை. மழை அல்லது குளிர்ச்சியின் குறியீடுகளையே ஊர்வலமாக எடுத்துவ்ருவார்கள். எங்கள் ஊரில் தென்னம்பாளையைக் கொண்டு உருவாக்கப்படும் மாரியம்மனின் ஆயுட்காலம் ஒரு இரவுதான். உருவாக்கப்படும் மாரியம்மனை ஊரில் வைத்துத் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் முதல் உருவாக்கி, ஒருநாள் இரவில் கொண்டாடிவிட்டு அடுத்தநாள் நீர்நிலைகளில் கலக்கிவிடுவார்கள். ஊர்த்தெய்வமான மாரியம்மனைச் சமயபுரம், திண்டுக்கல் போன்ற சிறுநகரங்களில் பெருங்கோயில் கடவுளாக ஆக்கிச் சிலைகளை வடித்திருக்கிறார்கள். அங்கே ஆகமவிதிகள் நுழைந்திருக்கின்றன. ஆனால் இப்போது கோயில்பூசாரிகளின் நலனை முன்வைத்து எல்லா அம்மன் கோயில்களையும் ஆகமவிதிகள் கொண்டு வழிபடும் முறைக்கு மாற்றிவிடும் வேலைகளும் நடக்கின்றன. இது நம்பிக்கைகளை விலக்கிவிட்டு அமைப்பை நம்பச்செய்யும் வேலை.

No comments:

Post a Comment