Friday, August 29, 2014

4. Khmer period Hindu god Shiva


This is a Victoria & Albert Museum Collection.  A Bronze statue of A Khmer period Hindu god Shiva found in Cambodia. It dates back 900-950 AD. In the Hinduism practiced in the early Cambodian empire the cult of the Hindu god Shiva was supreme and recognizable form, the trident he carries and the crescent moon in his hair. 

இந்தச் சிவபெருமான் வெங்கலச் சிலை விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் ஆசிய கலைப்பொருட்கள் பகுதியில் இருப்பது.  கம்போடியாவில் கைமர் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட சிலை. கி.பி 900-950 என்பது இதன் காலமாக அறியப்படுகின்றது. கையில் சூலம் ஏந்தியவாறு இருப்பதும் முடியில் பிறை சந்திரன் சூடியிருப்பதும் இச்சிலை சிவபெருமான் சிலை என்பதைக் காட்டுவதாக அமைகின்றது.

சிவபெருமான் வடிவம், அதிலும் குறிப்பாக முகம் கம்போடிய தேசத்தில் வடிக்கப்படும் போது அந்த தேசத்து மக்களின் முகத்தை ஒத்திருப்பதை பாருங்கள்!!

சுபா

Wednesday, August 20, 2014

3. East Java, Indonesia - Lord Krishna with Sathyabama




This  altar piece made of volcanic stone is a Victoria & Albert Museum (London, England) Collection.  This art piece was found in the East Java island of Indonesia.  The relief resembles altars on mountain shrines in Java. It depicts Lord Krishna, accompanied by Satyabama, acquiring  the Parijatha tree, which is a magic wish-fulfilling tree. Interestingly, this legend from a popular Javanese court poem was preserved in later periods through performances of the 'wayang purwa' commonly called as shadow puppet show.

லண்டன் விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் ஆசிய கலைப்பொருட்கள் பகுதியில் இருக்கும் இந்தச் சிற்பம் இந்தோனீசியாவின் கிழக்கு ஜாவா தீவில் கிடைத்த, 1425ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக அறியபப்டும் கலைச்சிற்பம். கிருஷ்ணன் சத்தியாபாமாவுடன் நிற்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. மந்திரசக்திகள் நிறைந்த, கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாதமரத்தைப் பெருவது போல இக்காட்சி அமைந்திருக்கின்றது.  இந்த சிற்பத்தில் இருக்கும் காட்சி இந்தோனீசிய தோல் பொம்மை நிழலாட்டத்தில் குறிப்பிடப்படும் ஒரு புராணக்கதையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சரி தோல் பொம்மை நிழலாட்டத்தை யாரேனும் இதுவரை பார்த்திருக்கின்றீர்களா?
​சுபா

Monday, August 18, 2014

2. Tamil Nadu, Chola architecture - Vishnu

இது தமிழகத்தின், அதிலும் குறிப்பாக சோழர் காலத்து சிற்பம். அமர்ந்த நிலையில் இருக்கும் இந்த பெருமாள் (விஷ்ணு) சிலை 10ம் நூற்றாண்டு சிறபம் என்ற குறிப்புடன் காணபப்டுகின்றது.


பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஆசிய நாடுகள் சேகரத்தில் இருக்கும் ஒரு கலைப்படைப்பு இது.

சுபா

Sunday, August 17, 2014

1. Orissa - Chamunda

நேற்று பிரித்தானிய அருங்காட்சியகத்தில் 5 மணி நேரங்களை செலவிட்டேன். முன்னர் 2 முறை சென்றிருந்தாலும் நீண்ட இடைவெளி ஆகி விட்டதால் மீண்டும் சென்று பார்த்து வரும் ஆவலில்  சென்ற எனக்கு ஒவ்வொரு பகுதியும் என் தேடுதலுக்கு விருந்தாகவே அமைந்தன.

அவ்வப்போது சில அறிய சேகரிப்புக்களின் படங்களை இங்கே ஒவ்வொன்றாகப்  பதிகிறேன்.


இங்கே படத்தில் காண்பது ஒரிசாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சாமுண்டா வடிவம். 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது இந்தச் சிற்பம். 

சுபா