Tuesday, November 10, 2015

17. Rosetta Stone - Egypt




Rosetta Stone, the only surviving fragment of a larger stone from a temple in Egypt. It carries an inscription in different languages which helped archaeologist to decipher the ancient Egyptian hieroglyphic script.  At the top portion of this stone the decree is written in hieroglyphs, the traditional script of Egyptian monuments. In the middle part, the same decree is written in Demotic script. This is the script used in everyday life of Egyptians in writing literature.  At the bottom of this stone the same decree is written in Greek, which was an official script used by the government at the time when this inscription was carved. At this time Egypt was ruled by a Greek dynasty and the decree was issued in honour of the  boy king PtolemyV Ephiphanes. It records  the decision of the Egyptian priest to establish a royal cult  in return for Ptolemy's concessions to the Egyptian temples. This decree records the date on 27 March 196 BC.  This stone was placed in a temple probably at the city of Sais near Raschid (Rosetta). Its a collection of British Museum.


ரொசேட்டா கல்வெட்டு. இது தொல்லியல் ஆய்வுலகில் மிக முக்கிய ஆய்வுப் பொருளாக அறியப்படுவது. பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒரு கண்ணாடி பெட்டிக்குள் இக்கல் வைக்கப்பட்டுள்ளது. 27 மார்ச் மாதம் கி.பி196. அரசன் தாலமி சில ஆலயங்களுக்கு வழங்கிய சலுகைகளை விளக்கிக் கூறும் அரச கட்டளையைக் காட்டும் ஒரு கல்வெட்டு இது. இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் இக்கல்வெட்டில் மூன்று வெவ்வேறு எழுத்துருக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்பதாகும்.

மேல் பகுதியில் முதலில் வருவது எகிப்திய ஹீரோக்லிப்ஸ் எழுத்துரு. அதனை அடுத்தார்போல் வருவது டிமோட்டிக் எனப்படும் எகிப்திய இலக்கியங்களை எழுதப்பயன்படுத்தப்பட்ட எழுத்துறு. அடுத்ததாக வருவது கிரீக் மொழி எழுத்துரு. இக்கல் எழுதப்பட்ட காலத்தில் எகிப்து கிரேக்கத்தின் ஆட்சி கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. ஆகவே கிரேக்க மொழி அரச மொழியாக அக்காலகட்டத்தில் எகிப்தில் அமைந்திருந்தது. எகிப்தின் ராஷீட் எனப்படும் பகுதியில் உள்ள ஆலயத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டதால் அது இப்பெயருடன் அழைக்கப்படுகின்றது.

இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே ஹீரோக்லிப்ஸ் எழுத்துக்களை வாசித்தறியும் முறையை தொல்லியல் ஆய்வுத்துறையினர் அறிந்து கொள்ள முடிந்தது என்பதே இக்கல்வெட்டின் மாபெரும் தனிச்சிறப்பு.

சுபா

Wednesday, August 19, 2015

16. Buddha Shakyamuni - Bihar



Buddha Shakyamuni - This damaged statue is a rare piece of art work. It's found in the eastern part of India in Bihar state in the Patna District. The cause for the damage is unknown. Buddha is also called Shakyamuni ​ meaning a sage of the Shakya clan.  This statue shows the most typical Buddha form, seated in meditation. Buddha abandoned his princely life to seek a way to escape the cycle of death and rebirth and in this pose he calls the earth to witness his successful resistance to the temptations.  This status is a dated about 50 -1100 AD. Its a Victoria and Albert Museum collection, originally given by the architectural association.

சாக்யமுனி - இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் ஆசிய பகுதி தொகுப்பில் இடம்பெறும் சிற்பம் இது. மிகச் சிதைந்த நிலையில் இந்தச் சிலை இருப்பதைக் காணலாம்.  இந்தியாவின் பீஹார் மானிலத்தின் பட்னா வட்டாரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சிற்பம் இது இதனை இங்கிலாந்தின் ஆர்க்கிடெச்சுரல் சொசைய்ட்டி இந்த அருங்காட்சியகத்திற்காக வழங்கியது. தியானத்தில் அமர்ந்த  நிலையில் இருக்கும் நமக்கு மிகப் பழக்கமான புத்தர் வடிவம் இது. பிறப்பு இறப்பு எனும் சுழற்சிகளிலிருந்து விடுபட தீவிர தியானத்தில் அவர் இருக்கும் காட்சி. இச்சிலை கிபி.50-1100   எனக் கருதப்படுகின்றது.

சுபா

Wednesday, July 22, 2015

15. ​​Dwarabalaka (Temple Guardian) - Kerala



A wooden statue of temple guardian. It is made of teak wood. Found in Kerala, South India. This status is dated 1600 - 1800 A.D.
This figure is holding a 'thandam' and has assumed a warrior pose such as those played in theater or temple dance. It is a Victoria and Albert Museum collection.

தேக்கு மரத்தால் செய்யப்பட்ட துவாரபாலகர் சிலை இது. 1600 - 1800 ஆண்டு என கணக்கிடப்படும் இச்சிலை கேரளாவில் கிடைக்கப்பெற்றது. தற்சமயம் இங்கிலாந்தில் உள்ள விக்டோரியா அல்பர்ட் அருங்காட்சியகத்தின் சேகரிப்பாக காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. கையில் தண்டம் போன்ற ஒரு கருவியை வைத்திருப்பது போலவும் தோற்றத்தில் மலையாள நாடகத்தில் அரக்கர் தோற்றம் போன்று நிற்கும் வடிவில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சுபா

Monday, June 22, 2015

14. Durga - Orissa, India



Throughout India, Durga is worshiped and considered as the goddess of eternity and magnificent power. This picture depicts a bronze statue of 15th Cent AD from Orissa India, Goddess Durga killing the buffalo Demon Makisha. Durga, the fierce form of the great goddess is an amalgam of all the energies of the gods, therefore she is the supreme power. The king of the Demons Makhisha appears  in the form of buffalo. When the head is cut off, Makhisha assumed human form. This beautiful sculpture is placed in the Asian Collection section in The British Museum, London, UK.

துர்க்கை அசுரர் தலைவன் மகிஷனை வதம் செய்யும் அற்புதக்காட்சி இது. இங்கிலாந்தின் லன்டன் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இந்தச் சிற்பம் ஆசிய அரும்பொருட்கள் தொகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 15ம் நூற்றாண்டு சிற்பமான இது இந்தியாவின் ஒரிஸா மானிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு சிற்பம். கலை நுணுக்கம் நிறைந்த இந்தச் சிற்பம் துர்க்கையின் மாபெரும் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் காட்டப்படுவதாக  வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுபா

Monday, April 27, 2015

13. Agastya - Java, Indonesia



Agastya considered as the supreme teacher of all siddhars. Agastyar sculptures are found even now in many south Indian temples.He is a yogi, by his devotion to lord Shiva, attained the highest form of respect in Hindu priesthood. Agastya is identified by his bearded, corpulent figure and the water vessel that he holds.This sculpture is now featured in the South East Asian collection section in the Victoria and Albert Museum. This sculpture identified as a 7th Century work is originally found in Java, Indonesia. It is made of Volcanic stone.

அகஸ்தியர் சிற்பம். இது இந்தோனீசியாவின் ஜாவா தீவிலிருந்து கொண்டுவரப்பட்டது. 7ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது ஜாவா தீவுகளுக்கே உரிய பூமி அமைப்பான எரிமலைக் கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பம். சித்தர்களின் குருவாகக் கருதப்படுபவர் இவர். இந்தியாவின் தென்னிந்திய கோயில்களில் மிகப் பரவலாக அகஸ்தியர் சிற்பங்களைக் காண முடியும். இந்தச் சிற்பம் இங்கிலாந்தில் உள்ள விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் தென்கிழக்காசிய சேகரிப்புக்கள் பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Saturday, March 14, 2015

12. Vishnu - Khajuraho



According to the British Museum records, this wonderful masterpiece is probably originating from Khajuraho. Some features of this sculpture are clearly showing unique and distinct art work that differ from South Indian style. In this image, Vishnu stands facing forwards, holding his characteristic weapons, the mace (Gada) and  Cakra. Beside him appears his incarnations, starting with cosmic fish and ending with Kalki. This sculpture dates back to 1000 AD.

பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இருக்கும் மகாவிஷ்ணு சிலை இது.  கி.பி1000 எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்தியாவின் கஜுராஹோ பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டதாக குறிப்புக்கள் உள்ளன. மகாவிஷ்ணுவின் முகச்சாயல் தென்னிந்திய வடிவத்திலிருந்து மாறுபட்டு இருப்பதைக் காணலாம். இந்த அரிய சிற்பத்தில் நின்ற நிலையில்   மகாவிஷ்ணு  வடிவம் அமைக்கப்பட்டிருக்கின்றது. பின்னனியில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களின் வடிவங்கள் சிறு வடிவங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றன. கலை நயம் பொருந்திய இந்த அரும்பொருள் தற்சமயம் இங்கிலாந்தின் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இருக்கின்றது.

இப்படி பல அருஞ்சொத்துக்களை அன்னிய நாடுகளுக்கு இழந்து விட்டு நிற்பது என்பது ஒரு புறமிருக்க உள்ளூரில் இருக்கும் சிற்பங்களைய்யும் அரும்பொருட்களையும் முறையாக சரியா பாதுகாக்கின்றோமா என்பது பெரும் கேள்வியாக நம் முன்னே நிற்கின்றது!.

சுபா

Friday, January 2, 2015

11. Dikbalas and Ganesha



This is another marvelous piece, originally from eastern part of India. It dates back to 1000-1100 AD. This is part of a lintel once stood at the entrance of a Hindu temple.
This structure features Dikpalas, the guardians of the eight directions and Ganesha. Beneath each deity appears a small creature or Asura.

இந்த நீள வடிவிலான அமைப்பு முன்னர் ஒரு ஆலயத்தின் முன்புற அமைப்பின் பகுதியாக இருந்தது. கிபி 1000லிருந்து 1100 எனக் கருதப்படும் இந்த அமைப்பு கிழக்கு இந்தியப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டு தற்சமயம் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. மிக நீளமான ஒர் அமைப்பு இது. ஏறக்குறைய 2 மீட்டர் நீளம் எனக் குறிப்பிடலாம். எண் திசைகளில் திக்பாலர்களுடன் விநாயகரும் இணைந்திருக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு இது. ஒவ்வொரு வடிவத்தின்  கால் பகுதியிலும் ஒரு சிறு வடிவம் அல்லது அசுரன் போன்ர அமைப்பு இருப்பதைக் காணலாம்.