According to the British Museum records, this wonderful masterpiece is probably originating from Khajuraho. Some features of this sculpture are clearly showing unique and distinct art work that differ from South Indian style. In this image, Vishnu stands facing forwards, holding his characteristic weapons, the mace (Gada) and Cakra. Beside him appears his incarnations, starting with cosmic fish and ending with Kalki. This sculpture dates back to 1000 AD.
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இருக்கும் மகாவிஷ்ணு சிலை இது. கி.பி1000 எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்தியாவின் கஜுராஹோ பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டதாக குறிப்புக்கள் உள்ளன. மகாவிஷ்ணுவின் முகச்சாயல் தென்னிந்திய வடிவத்திலிருந்து மாறுபட்டு இருப்பதைக் காணலாம். இந்த அரிய சிற்பத்தில் நின்ற நிலையில் மகாவிஷ்ணு வடிவம் அமைக்கப்பட்டிருக்கின்றது. பின்னனியில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களின் வடிவங்கள் சிறு வடிவங்களாக செதுக்கப்பட்டிருக்கின்றன. கலை நயம் பொருந்திய இந்த அரும்பொருள் தற்சமயம் இங்கிலாந்தின் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் இருக்கின்றது.
இப்படி பல அருஞ்சொத்துக்களை அன்னிய நாடுகளுக்கு இழந்து விட்டு நிற்பது என்பது ஒரு புறமிருக்க உள்ளூரில் இருக்கும் சிற்பங்களைய்யும் அரும்பொருட்களையும் முறையாக சரியா பாதுகாக்கின்றோமா என்பது பெரும் கேள்வியாக நம் முன்னே நிற்கின்றது!.
சுபா
No comments:
Post a Comment